ஏப்ரல் 12ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவக்கம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரர் கோவிலில் திருவிழா வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிம்மம், அன்னம், யானை, வெள்ளி,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும். 21ம் தேதி திருக்கல்யாணமும், 22 ஆம் தேதி மாலை திருத்தேரோட்டமும் நடைபெறும்.23 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.
Next Story