சங்கரன்கோவிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

சங்கரன்கோவிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்
 சித்திரைத் தேரோட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் (ஏப். 21) நடைபெறுகிறது. இக்கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழாண்டு கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை மாலையில் சுவாமி சிவப்பு சாத்தியும், இரவில் வெள்ளை சாத்தியும், சனிக்கிழமை காலை பச்சை சாத்தியும் வீதியுலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை ( ஏப். 21) நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு மேல் ஸ்ரீ விநாயகா், சுப்பிரமணியா் ரத வீதியுலா நடைபெறும். தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதராா்கள் செய்து வருகின்றனா்.

Tags

Next Story