அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

அஸ்தம்பட்டி  மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

சேலம், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. 

சேலம், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது.

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 30-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அஸ்தம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் புனிதநீர் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வேண்டுதலை வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

இதனிடையே நேற்று இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு சிவன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், அஸ்தம்பட்டி, மணக்காடு, வின்சென்ட், எம்.டி.எஸ்.நகர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 7-ந் தேதி காலை 7 மணிக்கு மத்திய சிறை பின்புறம் பகுதியில் இருந்து பால்குட ஊர்வலமும், இரவு 10 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 8-ந் தேதி காலையில் அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைபகம், மாலை 5 மணிக்கு அக்னி, பூங்கரகம் எடுத்து வருதலும், 9-ந் தேதி மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. 10-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Tags

Next Story