சித்ரா பௌர்ணமி; எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்

சித்ரா பௌர்ணமி; எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்
திருக்குவளையை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது.

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.எட்டுக்குடி முருகன்ஆறுமுகங்கள் 12 கைகள்கொண்ட முருகன் சிலையாகும் இதனால் இந்த சுப்பரமணிய சுவாமி முருகனை ஆறுமுக வேலவர் என்று அழைக்கப்படுகிறது.

எட்டுக்குடி சுப்பிரமணிய (முருகன்) சுவாமி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாகடந்த 14ஆம் தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்கியது அதைத் தொடர்ந்து தினம் தோறும் பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய (முருகன்) சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது.முக்கிய விழாவான தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு அறுமுகவேலவர் மலர் அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர்.

அதைத் தொடர்ந்து கோயில் முன் கீழ வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு வீதி மேல வீதி வடக்கு வீதி வழியாக மீண்டும் தேடி வந்து சேர்ந்ததுதேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் அதைத் தொடர்ந்து நாளை சித்ரா பௌர்ணமி பால் காவடி அபிஷேகம் நடைபெறுகிறது இதில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து கொண்டு வந்த லட்சக்கணக்கான லிட்டர் பால் அபிஷேகம் இன்று காலை முதல் நாளை மறுநாள் மாலை வரை நடைபெறுகிறதுவரும் 24ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு 27ஆம் தேதி விளையாட்டில் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது விழா ஏற்பாடுகளை கோயில்செயல் அலுவலர் கவியரசு கிராமவாசிகள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story