சித்ரா பௌர்ணமி திருவிழா

சித்ரா பௌர்ணமி திருவிழா

வங்காரம் பேட்டை கரை காத்த முனியாண்டவர் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


வங்காரம் பேட்டை கரை காத்த முனியாண்டவர் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகை கரை காத்த முனியாண்டவர் கோவிலில் 52 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அது சமயம் வங்காரம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் இருந்து சக்தி கரகம் பால்குடம் அலகு காவடி அக்கினி கொப்பரை தண்டாளம் வேல் சுக்குமாதடி சங்கிலி கருப்பு வீதி உலா காட்சியும் வாணவேடிக்கை தப்பாட்டத்துடன் புறப்பட்டு வீதிவலம் வந்து கோவிலை வந்து அடைந்தது மாலையில் கரை காத்த முனியாண்டவருக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் பாபநாசம் வங்காரம்பேட்டை கிராமவாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர் .

Tags

Next Story