மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழா
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழா, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 1,008 யாக குண்டங்கள் அமைத்து, மஹா வேள்வி பூஜையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜார்கண்ட் மாநில ஆளுனர் சி.பி.ராதாகிருஷ்ணன், கலெக்டர் அருண்ராஜ், தென்னக ரயில்வே அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் வேள்வி பூஜையில் பங்கேற்று, பூஜைகள் செய்து, ஆதிபராசக்தி அம்மனை வணங்கினர். யாகுண்டங்கள் மற்றும் வேள்வி பூஜை பொறுப்பினை, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் இணைச்செயலர் ராஜேந்திரன் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை, தாஞ்சவூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் வாசன், பொறுப்பாளர் ஜெயராமன் மற்றும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதிபராசக்தி மன்ற சக்திபீட நிர்வாகிள் செய்திருந்தனர்.