சித்ரகுப்தர் கோவில் சித்ரா பௌர்ணமி பூஜை!

திருப்பூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்திரகுப்தர் கோவில் 95 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி பூஜை நடைபெற்றது.

திருப்பூரில் பிரசித்தி பெற்ற அருள் மிகு ஸ்ரீ சித்ர குப்தர் கோவில் 95 ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜை-ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம். திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள சின்னாண்டி பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள் மிகு ஸ்ரீ சித்ர குப்தர் ஆலையம் உள்ளது.இந்த கோவிலானது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அடுத்த படியாக திருப்பூரில் தான் இருக்கிறது.இந்த கோவிலில் வருடா வருடம் சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி பூஜை நடைபெறுவது வழக்கம். 95 ஆம் ஆண்டு சித்திர பவுர்ணமி விழா 22 ம் தேதி மங்கள இசையுடன் ஸ்ரீ சித்ர குப்தர் உற்சவ சுவாமி திரு வீதி உலாவுடன் துவங்கியது.

சித்திரா பவுர்ணமி நாளன இன்று காலை கணபதி யாகத்துடன் துவங்கி பூர்நாஹிதி தீபாராதனையும் நடைபெற்றது.சித்திரை மாதம் பிறந்த ஆண்,பெண் குழந்தைகளுக்காக பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தால் நன்மை நடக்கும் என்ற ஐதீகமும் உண்டு.இன்று காலை சித்திர குப்தர் சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இந்த கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் பிற பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே கோவிலுக்கு வருகை தந்து சித்ர குப்த சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story