திருப்பூர் அருகே நாளை மகாலட்சுமி கோவிலில் சித்ரா பௌர்ணமி பூஜை விழா
சுவாமி
திருப்பூர் கோவில் வழி அருகே நாளை மகாலட்சுமி கோவிலில் சித்ரா பௌர்ணமி பூஜை! திருப்பூர் கோவில் வழி அருகே மகாலட்சுமி கோவில் சித்ரா பௌர்ணமி பூஜை நாளை நடக்கிறது.
திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் கோவில் வழி பஸ் நிலையம் அருகில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை 33 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அதன்படி விழா நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
காலை 5.45 மணிக்கு மகாலட்சுமி ஹோமம் 6.30மணிக்கு நவகிரக ஹோமம்,சுதர்சன ஹோமம் 7.15 மணிக்கு பூர்ணாகுதி தீபாரதனை நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு மஹாலக்ஷ்மி தேவிக்கு அபிஷேக அலங்கார தீபாரதனை நடக்கிறது.8.30 மணிக்கு கல்கி மகான் மகாலட்சுமி சுவாமிகள் அருளுரை மற்றும் ஆசீர்வாதம் வழங்குகிறார். காலை 9 மணிக்கு மேல் அன்னதானம் நடக்கிறது. விழாவில் பெருந்துறையை சேர்ந்த கார்த்திகேய சிவம் கலந்து கொண்டு யாகம் நடத்துகிறார். இதில் அனைத்து பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு அருளாசி பெறலாம்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மகாலட்சுமி கோவில் தர்ம சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயண பீடம் ஆன்மீக பேரவை செய்து வருகிறது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அருள்வாக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.