வேதவல்லி மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பால்குடம் ஊர்வலம்
பால்குடம் ஊர்வலம்
வேதவல்லி மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பால்குடம் ஊர்வலம். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வேதவல்லி மாரியம்மன் கோவிலில் 20ம் ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பால்குடம் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதையொட்டி, காலை 7:30 மணியளவில் பூங்காவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால் குடத்தை சுமந்து, ஊர்வலமாக சென்று சன்னதியை அடைந்தனர். தொடர்ந்து அனைவரும் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தனர். மகா தீபாராதனைக்குப் பின், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் காலை 6:00 மணி அளவில் கோ - பூஜை நடந்தது. வாசவி வனிதா சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
Next Story