கைலாசநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா!
கைலாசநாதர் கோயில்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்ட மூலவர் கைலாச நாதருக்கு 16வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதைப்போல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதில் முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் திராளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
Next Story