சுசீந்திரம் கோவிலில் சித்திரை விழா கால்கோள் நாட்டு
சுசீந்திரம் கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு கால்கோள் நாட்டு விழா நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் வருடம் தோறும் சித்திரை தெப்ப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டைய தெப்ப திருவிழா வருகிற 18-ஆம் தேதி நடக்கிறது. இந்த வருடத்திற்கான தெப்ப திருவிழாவிற்கான கால் கோள் விழா நேற்று காலை சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் முன்புநடைபெற்றது.
வருகிற 6-ம் தேதி மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சியும், 8-ம் தேதி கொடியேற்று விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாள் வாகனங்களில் பவனி நிகழ்வு நடக்கிறது. தினம் இரவு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பத்தாம் திருவிழா 17ஆம் தேதி நடக்கிறது. அன்று சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறை தெப்பக்குளத்தை வலம் வரும் தெப்ப திருவிழா நடக்கிறது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்களும் பெருமளவு கலந்து கொள்வார்கள்.