நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா
நாமக்கல் மாவட்டம் , நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ,ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில், தேர் திருவிழா ஒரு மாதம் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவில் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் திங்கட்கிழமை கரகம் எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி விமர்சியாக நடந்தது. இதில் விமான அலகில் 3 பேர் கிரேனில் தொங்கியபடி சென்று நேர்த்தி கடனை செலுத்தினர். அடுத்த வாரம் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story