வள்ளலார் பேரவையில் சித்திரை திருநாள் விழா

வள்ளலார் பேரவையில் சித்திரை திருநாள் விழா

வள்ளலார் பேரவையில் சித்திரை திருநாள் விழா

குமரி மாவட்டம், வடசேரி பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் பேரவையில் நடைபெற்ற சித்திரை திருநாள் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம், வடசேரி, ரவிவர்மன் புதுத் தெருவில் அமைந்துள்ள வள்ளலார் பேரவையில் சுத்த சன்மார்க்க ஸ்ரீகுரோதி சித்திரை திருநாள் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. வள்ளலார் பேரவை மாநிலத் தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் டாக்டர் ப. மகேஷ் வரவேற்புரை வரவேற்புரை ஆற்றினார்.

மூன்று முறை உயரம் தாண்டுதல் தங்கப் பதக்கம் பெற்ற தேசிய சாம்பியன் டாக்டர். எஸ். ஆறுமுகம் பிள்ளை, கன்னியாகுமாரி சமூக சேவகர் எம். சதீஷ் ராஜா, முன்னாள் ஊர் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலையில் திருவனந்தபுரம் கேரளா திரவ உந்து அமைப்பு மையம் (LPSC/ISRO) இயக்குனர் டாக்டர். வி. நாராயணன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட குற்ற வழக்கு தொடர்புதுறை உதவி இயக்குனர் ஜெப ஜீவராஜா ஆகியோர் அருள்ஜோதி ஏற்றி சித்திரை திருவிழாவினை தொடங்கி வைத்தார்கள்.

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் சி.ராஜன், தேவசம் பொறியாளர் ஆர். இராஜகுமார்,, ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். கோடை காலத்தின் அக்கினி நட்சத்திரத்தின் வெப்ப தாக்கத்தை தணிப்பதற்காக மழை வேண்டி வருண பகவான் சிறப்பு வேள்வி பிரார்த்தனை நடைபெற்றது.

Tags

Next Story