சித்திரை திருநாள்-வைகோ வாழ்த்து

சித்திரை திருநாள்-வைகோ வாழ்த்து

வைகோ 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம்தான் சித்திரை முதல் நாள் ஆகும். தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது. அதுவும், இந்த ஆண்டு, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை நிலைநாட்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகின்றன. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கொண்டாடும், நல்ல தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றது. மலரும் சித்திரையில், தளரும் பகை, வளரும் நகை என்று மகிழ்வோடு இந்நாளை நாம் கொண்டாடி மகிழ்வோம். அறிவின் வாராத வெற்றிகள் இல்லை என்பதை நிலைநாட்டியவர். மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி இல்லை. எட்டுத் திக்கும் அறிவு முரசு கொட்டி, மதி நுட்பத்தால், பல்வேறு துறைகளில் மேன்மையான பட்டங்களைப் பெற்று, இந்திய ஒன்றியத்திற்கான அரசமைப்புச் சட்டத்தை, நெகிழ்ச்சி உடையதாகவும், அதே நேரத்தில் இறுக்கமானதாகவும் உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14. மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை, தமிழரின் நித்திரைக்கு முடிவு கட்டி எட்டுத் திக்கும் சங்கொலிக்கட்டும் என தரணி வாழ் தமிழர்களுக்கெல்லாம் சித்திரைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

Tags

Read MoreRead Less
Next Story