நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி செம்பொற் ஜோதிநாதர் கோவிலில், நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுவாக சிவபெருமானுக்கு தினசரி 6 கால பூஜை நடப்பது வழக்கும். ஆனால் நடராஜருக்கு மட்டும் ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சித்திரைத் திருவோணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்களில் மட்டுமே சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி சித்திரைத் திருவோண நாளான நேற்று கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜை, நால்வர் துதி, திருவாசகம், பஞ்சபுராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓதி வழிபாடுகள் நடந்தது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குறவர்கள் நால்வருக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.