குமரி கோவில்களில் இன்று சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி

குமரி கோவில்களில் இன்று சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி

சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கன்னியாகுமரி கோவில்களில் நடைப்பெற்ற சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சித்திரை மாத பிறப்பு தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்ளிட்ட பிரபலமான கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து கோயில்களில் சித்திரை விஷுக்கணி காணும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கணி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதே போன்று தேரூரில் உள்ள சிவபெருமான் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றன. புத்தாண்டில் பெண்கள் வீடுகளில் உள்ள பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்று, கைநீட்டம் பெற்றனர். இவ்வாறு செய்வதால் ஆண்டு முழுவதும் வீட்டில் ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

Tags

Next Story