சிற்றேரி ஷட்டர் மாயம் - வீணாகும் ஏரி நீர்
வீணாகும் நீர்
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், சிற்றேரி மற்றும் பெரிய ஏரி உள்ளன. இரு ஏரிகளின் நடுவே, புதுப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ஓரம், சிற்றேரி உபரி நீர் வெளியேறும் கால்வாய் செல்கிறது. கோவிந்தவாடி சிற்றேரி ஏரியின் ஷட்டர் பழுதான நிலையில், அது மாயமானது. இதனால், மழைக்காலத்தில் கோவிந்தவாடி பெரிய ஏரி நிரம்பினால், சிற்றேரியில் தண்ணீரை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதை பொதுப்பணி துறையினர் கண்டுகொள்ளாததால், மிக்ஜாம் புயல் மழையால், கோவிந்தவாடி சிற்றேரி உபரி நீர் வீணாக வெளியேறி வருகிறது.
Next Story