மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குளோரினேசன்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குளோரினேசன்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் போதுமான அளவு குளோரினேசன் செய்ய புதுக்கோட்டை கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.


மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் போதுமான அளவு குளோரினேசன் செய்ய புதுக்கோட்டை கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் போதுமான அளவு குளோரினேசன் செய்யப்படுவதை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். புதுக்கோட்டை கூட்டத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.ஜி. சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் பேசியது: மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளிலும் தண்ணீர் வரத்து, இருப்பு, விநியோகம் ஆகியவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதையும், போதுமான அளவு குளோரினேசன் செய்யப்படுகிறதா என்பதையும் அவ்வப்போது கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தண்ணீர்ப் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடுகளையும் செய்ய தயார்க இருக்க வேண்டும் என்றார் அவர்.கூட்டத்தில், ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.ஜி. சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story