ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றம்

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றம்

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கோவிந்தா கோஷங்கள் முழங்க சொக்கப்பனை தீபம் ஏற்றம்  

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கோவிந்தா கோஷங்கள் முழங்க சொக்கப்பனை தீபம் ஏற்றம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில், திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் பெருமாள், தாயார்களை சர்வ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருள செய்தனர்‌. பின், மூலவர் சன்னதியில் இருந்து பரணி தீபம் உள்பிரகாரத்தை சுற்றி வலம் கொண்டு வரப்பட்டு, கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள சொக்கப்பண்ணைக்கு சிறப்பு பூஜைகளை நடத்தி தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து சொக்கப்பண்ணைக்கு தீபம் ஏற்றப்பட்டது.

இதனை அடுத்து உற்சவ தெய்வங்கள் கோவில் பிரகாரத்தை வலம் வந்து சன்னதியை அடைந்தனர். நிறைவாக துளசியால் அர்ச்சனைகள் செய்து நட்சத்திர தீபம், ஏக முக தீபம் மற்றும் மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் முழங்க பெருமாளை வழிபாடு செய்தனர்.

Tags

Next Story