சோழசிராமணி, ஜேடர்பாளையம்,நல்லூரில் இன்று மின்தடை

சோழசிராமணி, ஜேடர்பாளையம்,நல்லூரில் இன்று மின்தடை

மின் தடை

சோழசிராமணி,ஜேடர்பாளையம்,நல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி, ஜேடர்பாளையம் மற்றும் நல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று 11-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என பரமத்திவேலுார் மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் அறிவித்துள்ளார்.

இதில் சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சுள்ளிப்பாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளை, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு , ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வடகரையாத்தூர், காளிபாளையம், கரைப்பாளையம், கண்டிப்பாளையம், வடுகபாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாயக்கனூர் ,சிறுநல்லி கோவில், கள்ளுக்கடை மேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும் நல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நல்லூர், கந்தம்பாளையம்,‌ கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம்.ஆகிய பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story