சோழிங்கநல்லுார் மண்டலக்குழு கூட்டம்

சோழிங்கநல்லுார் மண்டலக்குழு கூட்டம்

மண்டலக்குழு கூட்டம் 

சோழிங்கநல்லுார் மண்டலக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

சோழிங்கநல்லுார் மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில், நேற்று நடந்தது. மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அ. தி. மு. க. , பெண் கவுன்சிலர் அஸ்வினி, தன் கைக்குழந்தையுடன் பங்கேற்றார்.

கவுன்சிலர்கள் பேசியதாவது; கோவிந்தராஜ், அ. தி. மு. க. , 193வது வார்டு: துரைப்பாக்கத்தில், நுழைவாயில் பிரச்சனைக்கு தீர்வு கண்ட பின், மயானம் கட்ட வேண்டும். சாய் நகர் வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும்.

விமலா கர்ணா, தி. மு. க. , 194வது வார்டு: பெத்தல் நகரில், குடிநீர், சாலை வசதி முறையாக வழங்காததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஏகாம்பரம், தி. மு. க. , 195வது வார்டு: ஒக்கியம் துரைப்பாக்கத்தில் கேட்பாரற்ற வாகனங்களை அகற்ற வேண்டும். எழில் நகரில் குழாய் உடைந்து குடிநீர் விணாவதால் மக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதில்லை.

அஸ்வினி கர்ணா, அ. தி. மு. க. , 196வது வார்டு: கண்ணகிநகரில் முதியோர் இல்லம் அமைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு கடைகள் கட்டி கொடுக்காததால் சாலையோரம் நடத்தி வருகின்றனர்.

மேனகா சங்கர், அ. தி. மு. க. , 197வது வார்டு: பனையூரில் பணி முடிந்த கழிவுநீர் திட்டத்தை பயன்பாட்டிற்கு விட வேண்டும். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சாலை சீரமைக்கப்படுகிறது. நடமாட்டம் உள்ள பகுதியில் சீரமைப்பதில்லை.

Tags

Next Story