திருமலைக்குமரன் கோவில் தேர் திருவிழா
தேர் திருவிழா
தென்காசி மாவட்டம், இலச்சி திருமலைக்குமரன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம், இலஞ்சியில் பிரசித்தி பெற்ற திருக்குமரன் திருக்கோயில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . மேலும் தேரோட்டத்தில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story