சோழாபுரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா!

சோழாபுரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா!

கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சோழாபுரி அம்மன் கோவிலில் சிவதுர்க்கை அம்மன் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே சோழாபுரி அம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் வளாகத்தில் புதிதாக சிவதுர்க்கை அம்மன் சன்னதி கட்டப்பட்டுள்–ளது. சிவதுர்க்கை அம்மன் சன்னதிக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலை வெகு விமரிசையாக நடந்தது.

இதில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலை–மை–யில், கோவிந்–த–ராஜ் நம்பூதிரி முன்னிலையில் சிவதுர்க்கை அம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. யாகசாலை புண்ணியகம், யாகசாலை சுத்தி, கோவில் பூஜை, பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், ஜலாதி வாசம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மிருத்யுஞ்சய ஹோமம், ஜலவிமோசனம், சதர்சுத்தி, பஞ்சகவ்யபூஜை, சுதர்சன ஹோமம், விம்பசுத்தி, நவகலச அபிஷேகம், ராக்ஷனா ஹோமம், இரவு அஸ்துரகலச பூஜை ஹோமம், ஆதிவாசகலச ஹோமம், கோமாதா பூஜை, சாயா பூஜை நித்ரகலசம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு திருப்–பள்ளி உணர்த்தல், கணபதிஹோமம், கோமாதா பூஜை, நித்ரகலச அபிஷேகம், சுகிர்த ஹோமம், மகாகும்பாபிஷேக கலச பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெற்றது.விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மண்டல தலைவர்கள் உமா மகேஷ்வரி, தம்பி கோவிந்தராஜ், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. நாகராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், செந்தூர் முத்து, இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், நிர்வாகிகள் மேங்கோ பழனிச்சாமி, சிவபாலன், தேவராஜ், மு.க.உசேன் மறறும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். .

Tags

Next Story