தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பு

தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவிப்பு

உத்திரமேரூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.


உத்திரமேரூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் இரு தரப்பு கிறிஸ்தவர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு தரப்பு கிறிஸ்தவர்களான தலித் கிறிஸ்துவர்கள் மீது பல்வேறு வகையில் தீண்டாமை சாதிய அடக்குமுறையை இக்கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள மற்றொரு தரப்பு கிறிஸ்தவர்கள் ஏவி வருகின்றதாகவும்,குறிப்பாக மாதா கோவிலில் தனியாக அமர வைப்பது, கோவிலுக்கு செல்லும் போது செருப்பு அணிய கூடாது,கோவிலில் எங்கள் கை கால்கள் மேல் பட கூடாது எனப் பல்வேறு தீண்டாமையை கடந்த பல நூறு ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றதாக தலித் கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இதை எதிர்த்து பல வகையான போராட்டங்களை நடத்தியும்,எங்களை கோவிலில் நுழைய விடாமல் தடுத்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததின் பேரில் மாவட்ட வருவாய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் துறை, காவல்துறை மற்றும் நாயுடுக்கள், ஆதிதிராவிடர், அருந்ததியர் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தள்ளதாகவும், அதில் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டி வழக்கு தொடர்ந்து,உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்திட உத்தரவிட்ட நிலையில் ஒரு சில சட்ட பாதுகாப்பு கிடைத்த நிலையில் இன்று வரை தனி சுடுகாடு, தனி கோவில், தனி திருவிழா என தான் தொடர்கின்றதாக ஒரு தரப்பு கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்துறையிடமும் எங்கள் கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள நாயுடு கிறிஸ்தவர்கள் தவறான தகவல்கள், கடிதங்களை என பரப்பி வருகின்றதாகவும், மேலும் எங்கள் பகுதியில் நிலவும் தீண்டாமை சாதிய பாகுபாட்டை போக்கவும் தொடர்ந்து நாங்கள் பயமின்றி அச்சமின்றி சராசரி வாழ்க்கையை வாழ்ந்திட விசாரணை செய்து சாதியவாதிகள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து தலித் மக்களாகிய எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்துவர்கள் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணியிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும்,ஆகையால் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகைப்புரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story