விம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்

விம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நுண்கலை அமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு துறையின் டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக துறையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பைபில் வாசித்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்து நாடகம், மவுன மொழி நாடகம், கரோல்ஸ் பாடல்கள், நடனம் என பலவேறு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன.மேலும் துறையை சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் குடில் அமைத்தும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் விழாவினை கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஸ்வரி, உதவி பேராசிரியர்கள் ஆண்டனி ரூபன், ராகுல், சகாய மெரினா, லின்சி, அல்போன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story