கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்  

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வருகிற 21ம் தேதி முதல் துவங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகு விமர்சனமாக நடைபெற்று வருகிறது. அது போல இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வருகிற 21-ம்தேதி முதல் துவங்குகிறது. இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வருகிற 21-ஆம் தேதி வியாழக் கிழமை பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனை நோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள், கிறிஸ்துமஸ் விருந்து, கிறிஸ்துமஸ் கேக்குகள் பரிமாறப்படுகிறது.

டிச.23 ஆம் தேதி சனிக்கிழமை நாலுமாவடி சுற்று வட்டாரத்திலுள்ள 6 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கிறிஸ்துமஸ் புத்தாடைகள், இலவசமாக மூன்று சக்கர சைக்கிள்கள், இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. டிச. 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு சென்னை சாம் ராஜ்குமார் குழுவினரின் வில்லிசை கலைநிகழ்ச்சி நாலுமாவடி புதுவாழ்வு சபை சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் குரும்பூர்- சண்முக புரம் சேகரகுரு கமல்சன் தலைமையில் நடைபெறுகிறது. டிச. 25 ஆம் தேதி திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் நாலுமாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்று வட்டாரத்திலுள்ள 3 ஆயிரம் பேர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து அறுசுவையுடன் வழங்கப்படுகிறது.

டிச.28 ஆம்தேதி வியாழக்கிழமை கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாரத்தான் சைக்கிள் போட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். இதில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story