திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம். திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது ,
இவ்விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி, துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரர் துணைத் தாளாளர் கிருபாநிதி இயக்குநர் டாக்டர் நிவேதா கிருபாநிதி, நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இயேசு பாலகன் பூமியில் அவதரித்த கதையை விளக்கும் வகையில் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் தத்ரூபமாகவும் மிக அழகான முறையில் அமைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், கலை நிகழ்ச்சி என விழா இனிதே தொடங்கியது. இவ்விழாவில் மாணவிகள் தேவதைகள் போல் வேடம் அணிந்து வலம் வந்தனர். மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பரிசு பொருள்களை மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் மாணவிகள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.இந்த நிகழ்ச்சியை விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி பி. பேபி ஷகிலா அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.
இந்த விழாவில் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் விவேகானந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர்கள் முனைவர் ம.தேவி , முனைவர் KC. K.விஜயகுமார் மற்றும் துணை முதல்வர் முனைவர் திருமதி மேனகா, அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன், ,திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வெ குமரவேல் , துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் த.ஸ்ரீதர்ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.