தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

கோவை:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.கோவை புறநகரில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.சூலூர் பகுதியில் உள்ள சகாய மேரி அன்னை கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர்.

சிறப்பு கூட்டு பிரார்த்தனை பாடல்கள் பாடி ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். பங்குத்தந்தை ஜோசப் சுதாகர் நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனையை நடத்தி அனைவருக்கும் நற்கருணை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.நள்ளிரவு 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க பங்கு குருக்கள் குழந்தை ஏசு சொரூபத்தை ஆலயத்தில் இருந்து பவனியாக எடுத்து வந்து புல்குடிலில் வைத்து வணங்கினார்.இதே போல கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா ஆலயத்திலும் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Next Story