அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ் பண்டிகை

அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இணைந்து கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேவாலயத்தில் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேவாலயத்தின் பங்குத்தந்தை மரியதாஸ் தலைமை தாங்கினார்.

பங்குத்தந்தை அருளப்பன், நூருல்லா ஷெரிப், பாபு அப்துல் சையத், உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைத்தும் மதங்களை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து சீர்வரிசையில் பழங்கள், இனிப்புகள், கேக், சாக்லேட் உட்பட பல பொருட்களை தேவாலயத்தில் உள்ளவர்களுக்கு வழங்கி கிறிஸ்மஸ் கொண்டாடிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி, ஜானி பாய், ஷாயின் ஷா, வாஹித் பாய் ஆசிரியர் வேடியப்பன், ஜீவா, மாது, ராஜேந்திரன், தமீஸ், பென்சகீர், வெங்கடேசன், நடராஜ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக அனைத்து மதங்களை சார்ந்தவர்கள் இணைந்து கிறிஸ்துமஸ், ரம்ஜான், பங்குனி உத்திரம், பொங்கல் உட்பட பல்வேறு பண்டிகைகளை கொண்டாடி வருவதாக ஆசிரியர் கணேசன் கூறினார்.

Tags

Next Story