சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

சேலம் ஹோலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

சேலம் ஹோலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஹோலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், எஸ்.எம்.எம்.ஐ. சேலம் மண்டல தலைவி மார்சலின் ரோஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பள்ளி தாளாளர் சேசுராஜ், முதல்வர் குழந்தைசாமி, நிர்வாகி ஏசுதாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜாய் ஆக்னஸ், துணைத்தலைவர் கவுதமன், செயலாளர் சங்கர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த விழாவையொட்டி நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், குழந்தைகள் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கோப்பைகள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிறைவாக மாணவர்களுக்கு கேக் வழங்கி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

Tags

Next Story