பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

X
திண்டுக்கல் அச்யுதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடந்தது.
திண்டுக்கல் அச்யுதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடந்தது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள அச்யுதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம் தலைமையில் நடந்தது. குழந்தைகள் ஏசு மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாதிரியார் அந்தோணிசாமி, முன்னிலை வகித்தனர். 6ம் வகுப்பு மாணவி என்ஸிலைட்டா நத்தன்யா வரவேற்றார். 7ம் வகுப்பு மாணவிகள் ஆலியா, அக்சயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முதன்மை முதல்வர் சந்திரசேகரன் பேசினார்.ஆறாம் வகுப்பு மாணவி தான்யாஸ்ரீ பேசினார். கிறிஸ்துமஸ் விழா நடனம், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு பரிசுகள் வழங்கினர். 7ம் வகுப்பு மாணவி சாருலேகா நன்றி கூறினார்.
Next Story
