தமிழ்நாடு காங்கிரஸ் சார்ப்பில் கிறிஸ்துமஸ் விழா
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட ராமன்துறை மீனவ கிராமத்தில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா நேற்று மாலையில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலமை வகித்தார். நிகழ்வில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கிறிஸ்மஸ் கேக் வெட்டினர். தொடர்ந்து நலதிட்ட உதவியாக 500 ஏழை மீனவ குடும்பதினருக்கு இறைச்சி மற்றும் மளிகை பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொதுசெயலாளர் பால்ராஜ்,கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன் ,குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரடி கென்னடி, இனயம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.