இந்தியா கிறிஸ்தவ சேவை சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா
இந்தியா கிறிஸ்தவ சேவை சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா
சுமார் ஆயிரம் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேட மணிந்து ஊர்வலமாக சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்தனர்
சேலம் வசந்தபுரம் இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சமாதான இல்ல ஆதரவற்ற குழந்தைகள் சுமார் 1,000 பேர் கிறிஸ்துமஸ் தாத்தா வேட மணிந்து ஊர்வலமாக சென்றனர். வசந்தபுரம் புனித பேசில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஏற்காடு ரோடு, அஸ்தம்பட்டி, மணக்காடு, சின்ன திருப்பதி வழியாக சென்று மீண்டும் புனித பேசில் மெட்ரிக்குலேசன் பள்ளியை சென்றடைந்தது. மேலும் கிறிஸ்துமஸ் மரங்களுடன் வாகன அணிவகுப்பும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய நிறுவனரும், தலைவருமான ஜெயராஜ் கிருஷ்ணன், செயலாளர் ஜெயசீலி கிறிஸ்டி, நிர்வாக இயக்குனர் நீவா லில்லி எஸ்தர், இணை இயக்குனர்கள் பேசில் பிரைட், டேவிட் லிவிங்ஸ்டன், சோபியா டேவிட் லிவிங்ஸ்டன், ஜாய் ஆக்னிஸ் மற்றும் வீரராகவன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் அனைத்து கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story