மலவிளை ஆதி பெந்தேகோஸ்தே சபையில் கிறிஸ்மஸ் பிரார்த்தனை.
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே மலவிளை ஆதிபெந்தெ கொஸ்தே சத்திய சபையில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.. தலைமைப்போதகர் சாது. ஆன்றணி ஜோயல் சிபு கிறிஸ்துமஸ் சிறப்புச்செய்தி வழங்கினார்.
தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பார்வையற்ற பாடல் குழுவினரின் இசைப்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் ஆராதனை நிகழ்ச்சியில் குமரி மாவட்டம் மட்டுமல்லாது, பிறமாவட்டங்கள், கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி மலைவிளை ஆதிபெந்தெ கொஸ்தே சத்திய சபையின் முன்புறம் பல்வேறு வகையான வாழைக்குலைகளால் ஸ்டார் அமைக்கப்பட்டு, செவ்விளநீர், உலத்திக்குலை ஆகியவற்றுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் சபையைச்சுற்றியுள்ள பகுதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மலவிளைக்கு சென்று வருவதற்கு திருவட்டார் அரசு போக்குவரத்துக்கழகத்திலிருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. ஆராதனை ஏற்பாடுகள் சபையினர் செய்திருந்தனர்.