தேவாலய பாதிரியார் பணியிட மாற்றம் - எம்.எல்.ஏ மரியாதை

தேவாலய பாதிரியார் பணியிட மாற்றம் - எம்.எல்.ஏ மரியாதை

மரியாதை செய்த எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி

ராயபுரம் சி.எஸ்.ஐ கிருத்துவ சபை பாதிரியார் மார்ட்டின் பணி மாறுதலில் செல்வதையொட்டி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிருத்துவ சபையின் பாதிரியார் மார்ட்டின் பணி மாறுதலையொட்டி இராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் இரா.மூர்த்தி நேரில் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இந்நிகழ்வில் கிழக்கு பகுதி செயலாளர் இரா.செந்தில் குமார், வட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருச்சபை ஊழியர்கள், மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story