CII கரூர் மாவட்ட அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கான வணிகம் மற்றும் நிதி சார்பு குறித்து சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

CII கரூர் மாவட்ட அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கான வணிகம் மற்றும் நிதி சார்பு குறித்து சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
CII கரூர் மாவட்ட அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கான வணிகம் மற்றும் நிதி சார்பு குறித்து சிறப்பு பயிற்சி நடைபெற்றது கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி முன்னிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் நோக்கம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டது. ஆயிரம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 320 தொழில் முனைவோரை உருவாக்குவதற்காக தமிழகத்தில் 8 மாவட்டங்களில், "புதிய பயணம் ,புதிய வளர்ச்சி" என்ற தாரக மந்திரத்துடன் துவக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கரூர் சி ஐஐ மாவட்ட அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் ரீதியான அனுபவ கருத்துக்களை பயிற்சியாளர்களுக்கு பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் சின்தசிஸ் ஹோம் டெக்ஸ் இயக்குனர் சந்தியா சுதாகர், சி ஐ ஐ கரூர் மாவட்ட துணை தலைவர் பிரபு, முன்னாள் தலைவர் சங்கர், சுபாஷினே அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story