மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அடிப்படை வசதிகளை வலியுறுத்தி மதுரை மேயர் இந்திராணியை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு உண்டானது.
மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள் மதுரை முத்துப்பட்டி பகுதியில் இன்று மாநகராட்சி சார்பில் மக்களின் முதல்வர் என்ற தலைப்பில் கோரிக்கை மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது.இதில் 73,78 வது வார்டு பொதுமக்கள் அடிப்படை வசதிகளை கேட்டு முகாமில் பங்கேற்று மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதில் 73 வது வார்டு கனெக்ட் நகர் பகுதி மக்கள் சாலை வசதி இன்றி மிகவும் சிரமப்படுவதாகவும் கடந்த தினங்களில் பெய்த மழையால் மிகவும் பாதிப்படைந்து விட்டோம் என்றும் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கூறியும் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று முகாமிற்கு வருகை தந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
மேலும் அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர் பின்னர் அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர்கள் அனைத்து வசதிகளையும் கூடிய விரைவில் செய்தி தருகிறோம் என்று கூறியவுடன் அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர். அடிப்படை வசதிகளை செய்து தராததால் தங்கள் பகுதிக்கு வந்த மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு நிலவியது.
