அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

செய்யாறில் கோவில் விவகாரம் தொடர்பாக ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

செய்யாறில் கோவில் விவகாரம் தொடர்பாக ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருள்மிகு ஸ்ரீ பட்சீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள்,இந்து சமய அறநிலையத் துறையினர், காவல்துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சித்தனர்.

ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து 3.12 ஏக்கரில் 30 சென்ட் உள்ள இடத்தை அளவீடு செய்து காண்பித்து விட்டு ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையினர், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர்,100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐக்பந்தி தேடும் பணியில் வருவாய் துறையினர் அளவீடு செய்தனர் மேலும் பட்சீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நில அளவீடு செய்து அறிவிப்பு தொடர்பாக பொது இடத்தில் வாசித்து ஆக்கிரமிப்பு அகற்ற ஜேசிபி மூலம் அதிகாரிகள் முயற்சித்தனர்.

அப்போது ஜேசிபி முன்பு ஆக்கிரமிப்பு குடியிருப்பு வாசிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6 மணி வரை அதிகாரிகள் காத்து இருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்ற செல்லும் போது ஜேசிபி பழுதானதால் மீண்டும் ஜேசிபி கொண்டு வந்து ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி, மேலும் மின் ஊழியர்கள், இந்து சமய அறநிலையத் துறையினர், காவல் துறையினர் , தீயணைப்பு துறையினரை ஆக்கிரமிப்பு மற்றும் ஆதரவாளர்கள் பணி செய்ய விடாமல் மிரட்டல் தொணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நீதிமன்றம் உத்தரவு படி பேனர் வைக்க காத்திருந்த அதிகாரிகள் 6 மணிக்கு பிறகு கலைந்து சென்றனர். கடந்த பத்தாண்டுகளில் 4 வது முறையாக ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி செய்து நீதிமன்ற உத்தரவை வாசித்து கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது. செய்யாறு சார் ஆட்சியர் பொறுப்பு தனலட்சுமி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, ஆய்வாளர் நடராஜன், வட்டாட்சியர் முரளி , நீதிமன்ற ஆமினா சங்கீதா பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story