நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முற்றுகை போராட்டம் 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி 27வது வார்டுக்குட்பட்ட பாரதியார் தெரு, அன்னை தெரசா தெரு, என்.எஸ்.கே தெரு, உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து கொள்வதால் மக்களுக்கு சுகாதாரக்கேடும் அபாயமும் நிலவுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்

Tags

Next Story