திருப்பூரில் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூரில் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார்

திருப்பூரில் பொங்கல் பரிசு பட்டியலில் பெயர் இல்லாததால் எஸ்வி காலனி ரேஷன் கடையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் பொங்கல் பரிசு பட்டியலில் பெயர் இல்லாததால் எஸ். வி., காலணி ரேசன் கடையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு மற்றும் பரிசுத்தொகை பட்டியல் நேற்று வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் பட்டியல் தயாராகாததால் இன்று வெளியிடப்படும் என்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வமுடன் காலை 7:00 மணி முதல் டோக்கன் வாங்க ரேஷன் கடைக்கு வந்து கொண்டிருந்தனர். ரேஷன் டோக்கன் வழங்குவதில் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இந்த நிலையில் திருப்பூர் எஸ்.வி.காலனி கிழக்கு வீதியில் உள்ள ரேஷன் கடையில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறாததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்,

பொதுமக்கள் விற்பனையாளர்களிடம் இது குறித்து கேட்டதற்கு நீங்கள் ஐடி செலுத்துகிறீர்கள் அதனால் உங்களுக்கு பொங்கல் பரிசு தொகை இல்லை என்று தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் நாங்கள் அனைவரும் தினவூதியத்திற்கு கம்பெனிக்கு சென்று வருகிறோம் இந்த நிலையில் நாங்கள் எவ்வாறு ஐடி கட்டுவோம் எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கும்பொழுது ஐடி எப்படி நாங்கள் செலுத்துவோம் என்று கேள்வி எழுப்பினர் மேலும் எங்களுக்கு பொங்கல் பரிசு தொகை வராவிட்டால் அனைவரும் ரேஷன் கார்டுகளை திருப்பி வழங்குவதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story