கேரளாவிலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சிறைபிடிப்பு
மாங்கோடு அருகே கேரளாவிலிருந்து கழிவு ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
மாங்கோடு அருகே கேரளாவிலிருந்து கழிவு ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து குமரி மாவட்ட பகுதிகளில் கொட்டி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு வரும் வாகனங்களில் சில பொது மக்களிடம் சிக்கி கொள் கின்றன. இந்தநிலையில் அருமனை மாங்கோடு குருசடி அருகே ஒரு மினி டெம்போ சென்று கொண் டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் திரண்டு . அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.அப்போது அதில் கேரளாவில் இருந்து கழிவு பொருட்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து அருமனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்தது வெள்ளாங்கோடு தீப்பாஞ் சன்விளையை சேர்ந்த தாசன் மகன் அஜய் என்பது தெரியவந்தது.இதையடுத்து மாங்கோடு பஞ்சாயத்து நிர்வாகம் ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Next Story