புல்வெட்டி கண்மாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்
புல்வெட்டி கண்மாய்
திண்டுக்கல் மாவட்டதின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதி பாசனத்திற்கு காமராஜர் அணை முக்கிய ஆதாரமாக உள்ளது. மேலும் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று சிறப்பு மிக்க கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டிக்கண்மாய் ஆகிய 3 கண்மாய்கள் வெட்டப்பட்டது. ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து செம்பட்டி வரும் தண்ணீர் 3 கண்மாய்களிலும் தேக்கி வைக்கப்படுகிறது. தற்போது கருங்குளம், நடுகுளம் நிரம்பி புல்வெட்டி கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து மறுகால் பாய்கிறது. இந்த காட்சி ரம்யமாக உள்ளது. அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆபத்தை உணராமல் புல்வெட்டி கண்மாயில் குளித்து வருகின்றனர்.
Tags
Next Story