சிஐடியு ஆர்ப்பாட்டம்

சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்களை பாதிக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் சிஐடியு ஏன் கையெழுத்திடவில்லை என்பதை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரியத்துறையில், அரசு ஆணை 100 இன் படி, சென்னையில் நடந்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மின்வாரியத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தற்போது பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர்களின் எதிர்காலம் பாதிக்கின்ற, வகையில் உள்ளதாலும், அரசின் உத்திரவாதம் அளிக்காத காரணத்தாலும், எதிர்காலத்தில் மின் நுகர்வோர்கள், பணியாளர்கள், ஓய்வூதியர்கள் பாதிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் மின் ஊழியர் மத்திய அமைப்பு -CITU ஏன் கையெழுத்திடவில்லை என்பதையும் விளக்கி பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் , கோட்ட நிர்வாகி நாராயணன் கோட்ட செயற்குழு முன்னணி ஊழியர்கள் தர்மராஜ் , செந்தில், பாண்டியராஜன், சுப்பையா, நீலமேகம், சுபாஷ், சிதம்பரம், தினேஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story