அரியலூரில் சிஐடியு மாவட்ட குழு கூட்டம்

அரியலூரில் சிஐடியு மாவட்ட குழு கூட்டம்
சிஐடியு மாவட்டக்குழு கூட்டம்
அரியலூர் சிஐடியு சங்க அலுவலகத்தில் சி ஐ டி யு மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் சங்க அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட குழு கூட்டம் தலைவர் கே கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.ரங்கராஜன் கலந்துகொண்டு மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். அதனைத் தொடர்ந்து செயலாளர் பி.துரைசாமி நடைபெற்ற வேலைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் அக்டோபர் 28 முதல் மார்ச் 22 வரை உள்ள வரவு-செலவுகளை மாவட்ட பொருளாளர் கே கண்ணன் வாசிக்க ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதில் மார்ச் -31 ல் சிஐடியு சார்பில் சிறப்பு பேரவை அரியலூரில் நடத்துவது, அனைத்து இணைக்கப்பட்ட சங்கங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோரை திரட்டுவது, சிதம்பரம் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தொல், திருமாவளவனை வெற்றி பெற பிரச்சாரம் செய்வது. சிபிஐ(எம்) திண்டுக்கல், மதுரை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சங்க வாரியாக நிதி திரட்டி கோட்டா வசூல் செய்து மார்ச் -31 அன்று பேரவையில் வழங்குவது, கைத்தறி சங்கம் 5 ஆயிரம், கட்டுமானம் 5 ஆயிரம், அங்கன்வாடி 5 ஆயிரம், மின்சார வாரியம் 5 ஆயிரம், சிமெண்ட் 5 ஆயிரம், மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் 2 ஆயிரம் , தையல் தொழிலாளர்கள் ஆயிரம் , ஓட்டுநர்கள் சங்கம் ஆயிரம், பொது தொழிலாளர் சங்கம் 2 ஆயிரம், போக்குவரத்து 6 ஆயிரம் ஆக மொத்தம் 50ஆயிரம் ரூபாய் வசூல் செய்து வழங்குவது, யூடியூப் சேனல் துவங்க அனைத்து சங்கமும் நிதி அளிப்பது. தேர்தல் முடிந்த பிறகு பதிவு செய்யப்பட்ட அனைத்து சங்கமும் ஆண்டு பேரவைகள் நடத்துவது என்று முடிவுகள் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மாவட்ட குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

Tags

Read MoreRead Less
Next Story