திண்டுக்கல்லில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்

20 விழுக்காடு போனஸ் கோரிக்கையை வலியுறத்தி திண்டுக்கல்லில் பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்கள் சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போனஸ் கோரிக்கை குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவேண்டும். கொரனா காலத்தைக் காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்கக்கூடாது. குறைந்தபட்ச சம்பள திட்டத்தின்படி 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பாக மத்திய சங்க நிர்வாகிகள் ஐ.ஜெயக்குமார், வெங்கிடுசாமி, ஜோசப் அருளானந்தம், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக உமாபதி, மாரிமுத்து, கூட்டுறவுத் துறை சார்பாக ஆர்.பால்ராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பாக சீனிவாசன், கோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags

Next Story