சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்

சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து புதுக்கோட்டையில் சிஐடியூ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் (சிஐடியூ) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் அன்புமணவாளன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் பேசினர். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும், ஆன்லைன் சான்று ஆவணங் களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர் சான்று ஆவணங்கள் அழிக்கப்பட்ட தற்கான காரணங்களை ஆய்வு செய்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவேற்றம் செய்ய வரும் தொழிலாளர்களின் ஒருநாள் வேலை இழப்பை ஈடுசெய்யும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Tags

Next Story