சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சி அலுவலகம் எதிரில் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. சாலையோர வியாபாரிகள் விடுபடாமல் கணக்கெடுத்து அடையாள அட்டையில் வழங்கப்பட வேண்டும், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் தள்ளு வண்டிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கப் பொருளாளர் அம்பிகா தலைமை தாங்கினார், துணைத் தலைவர் முரளி முன்னிலை வகித்தார், பகுதி தலைவர் சங்கர் செயலாளர் சுப்பிரமணி ,செல்வம்,உமா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பிரபு நன்றி கூறினார்.
Next Story