சிஐடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சிஐடியூ சங்கத்தினர் சார்பில் பிஏசிஎல் முதலீட்டாளருக்கு நிபந்தனையின்றி முதிர்வு தொகையை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்ககிரியில் சிஐடியூ சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவியே கோரிக்கை மனு அளிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சிஐடியூ பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்க பொறுப்பாளர் தாமரை தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஏசிஎல் நிறுவனம் 1956 வது கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டடு இந்திய நாடு முழுவதும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. இதில் 6 கோடிக்கும் மேற்பட்ட சாமானிய பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகை வழங்காமல் நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மூடிவிட்டனர். இதனை அடுத்து உச்சநீதிமன்றம் கடந்த 2016 ஆண்டு வழங்கிய தீர்ப்பில் கம்பெனி நில மற்றும் சொத்துகளை விற்று 6 மாதங்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்கிட உத்தரவு பிறப்பித்தது மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்எம் லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு 8 வருடங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பிஏசிஎல் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு நிபந்தனையின்றி முதிர்வு தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தமிழ்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அப்போது களப்பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் முதலீட்டாளர்கள் பலரும் உடனிந்தனர்.