திருச்செங்கோடில் நகராட்சி பள்ளிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு
நகர்மன்ற தலைவர் ஆய்வு
இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பின் வரும் 10ஆம் தேதிஅனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி என பதினாறு பள்ளிகளில் தூய்மை பணிகளைச் செய்து மாணவர்களுக்கு தேவையான வசதிகள்,
கழிப்பறை வசதி, கழிப்பறையில் தண்ணீர் வசதி, சத்துணவு கூடங்கள் தூய்மையாக உள்ளதா அங்கு குடிக்க குடிநீர் வசதி உள்ளதா என்பது குறித்து நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணி,
நகர் மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவணன், புவனேஸ்வரி உலகநாதன், தாமரைச்செல்வி மணிகண்டன், மைதிலி காந்தி, ராஜா,ரவிக்குமார், சினேகா ஹரிகரன்,பள்ளி தலைமை ஆசிரியை பூங்கோதை ஆகியோர் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கூறியதாவது நீண்ட இரண்டு மாத கால இடைவெளிக்கு பிறகு வரும் பத்தாம் தேதி பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் பள்ளிக்கூடங்களை தூய்மைப்படுத்தி,
வர்ணங்கள் பூசி கழிவறைகள் சத்துணவுக் கூடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதா என்பது குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம் சிறு சிறு குறைகளைக் கண்டு சீரமைக்க நகராட்சி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினோம் மேலும் ஏதாவது மாணவர்களுக்கு குறைகள்,
இருப்பின் பொதுமக்கள் கண்டறிந்தால் நகராட்சிக்கு தெரியப்படுத்தினால் உடனடியாக சீர்படுத்தி கொடுப்பதாக உறுதி அளிக்கிறோம் என கூறினார்.ஆய்வின்போது நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு உடன் இருந்தார்.