தர்மபுரியில் நகர் மன்றக் கூட்டம்: 43 தீர்மானங்களுக்கு ஒப்புதல்
நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தர்மபுரி நகர் மன்றக் கூட்டத்தில் 43 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்றக் கூட்டம் நகர் மன்றத் தலைவர் லட்சுமி மாது தலைமையில் நடைபெற்றது.
ஆணையர் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சிக்கு உள்பட்டு 2, 3-ஆவது வார்டுகளில் அரசு நடுநிலைப் பள்ளியில் பொது சமையல் கூட்டத்தில் 2,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பது,
25-ஆவது வார்டு சாலை விநாயகர் சாலை அரசுப்பள்ளி கழிப்பறையை ரூ. 2.30 லட்சம் மதிப்பில் பழுது பார்ப்பது, குடிநீர் குழாய் பழுது சரி செய்யும் பணிக்கு ரூ. 9.90 லட்சம் மதிப்பிலான பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள 43 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இதில், அனைத்து தீர்மானங்களுக்கும் உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினர். கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்.
நகர பகுதியில் ஒளிராமல் உள்ள தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.